Monday, March 18, 2013
இலங்கை::ஜெனீவாவில் அமெரிக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் நாட்டிலிருந்து ஏனைய மாநிலங்களுக்கு பரவிவரும் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்தியா இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜெனீவாவுக்கு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் சென்று வந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்காவிட்டாலும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறும் எனவும் (புலி)நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் ஒருபோதும் இந்தியாவை இலங்கைக்குச் சார்பாக வாக்களிக்கச் செய்யும் என்று தான் நம்பவில்லை எனவும் அவர் கூறினார்.
உலக நாடுகள் இந்தத் தீர்மானம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை தாங்களால் அறியக்கூடியதாகவுள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறும் வாக்கெடுப்பே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது இலங்கையை பெரிதளவில் பாதிக்கும் என்று தாங்கள் கருதவில்லை.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த முறையும் மீண்டும் ஒரு தடவை காலக்கேடு இலங்கைக்கு வழங்கப்படும் நிலையே ஏற்படும். தமிழர்களுக்கு ஐ.நா.வில் இதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்றால் அது நீண்ட நாட்கள் செல்லும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

.jpg)
No comments:
Post a Comment