Thursday, March 7, 2013

புதுக்கோட்டை மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படை தாக்குதல்?

Thursday, March 07, 2013
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.

இதில் அய்யாத்துரை என்பவருக்கு சொந்தமான படகில் குப்புசாமி, வீரமணி, பாண்டி, கிஷோர் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து படகுகளில் வந்த சிங்கள கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

இங்கு வந்து மீன் பிடிக்க உங்களுக்கு என்ன தைரியம் என்று கேட்டதோடு, மீனவர்கள் 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். அத்துடன் அவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசியதோடு பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக்கொண்டனர். திசை காட்டும் கருவியையும் சேதப்படுத்தினர்.

இதையடுத்து மீனவர்களின் படகில் தாவிய  கடற்படையினர், படகின் டீசல் டேங்கை திறந்து அதில் சர்க்கரையை கொட்டினர். ஒரு சில படகுகளில் என்ஜினை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் படகுகள் பழுதாகி நடுக்கடலில் நின்றது. பின்னர் கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் செல்போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். உடனே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை அழைத்து வர மற்ற மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment