Sunday, March 24, 2013
கான்பூர்::பொது தேர்தலுக்கு பிறகே காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர் என்று முடிவு செய்யப்படும்Õ என மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறினார்.
உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்த கிரிக்கெட் சங்க கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் தலைமை பொறுப்பு தற்போது மன்மோகன் சிங் கையில் பாதுகாப்பாக உள்ளது. அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற இயலாது. ஆனால், 2014ம் ஆண்டு நடக்கும் பொது தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர் பதவி ஏற்பார்கள் என்று முடிவு செய்யப்படும். காங்கிரஸ் நாடாளுமன்ற குழுதான் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். தேர்தலை சந்திக்க கட்சியினரை தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி வழி நடத்தி செல்வார்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை அமைச்சர் பெனி பிரசாத் விமர்சித்த பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதன் பின்னணியில் அரசியல் எதுவும் இல்லை.

No comments:
Post a Comment