Sunday, March 3, 2013

பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது!

Sunday, March 03, 2013
இலங்கை::மாத்தளை, நாவுல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி மற்றும் 8 ரவைகள் காணாமற் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை அருகிலுள்ள விகாரை ஒன்றிலுள்ள மலசலகூடத்திற்கு செல்லும் போது துப்பாக்கியை வெளியில் வைத்துச் சென்றுள்ளார்.

கான்ஸ்டபிள் திரும்பி வந்து பார்க்கும் போது அவர் வைத்த இடத்தில் துப்பாக்கி இருக்கவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாத்தளை பொலிஸ் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment