Saturday, March 09, 2013
UN::ஜெனீவா:.இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது பிரேரணையை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி இந்த விசாரணை தொடர்ச்சியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
விவாதங்களின் போது முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்த பிரேரணையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளது...
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் வரைவு ஜெனீவா மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜெனீவாவில் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூடி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நாடுகள் சார்பிலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இறுதியில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கான வரைவு தீர்மானம் ஜெனீவா மாநாட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தில் என்ன கூறப்படும் என்பதற் கான மாதிரி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல், ஆட்கள் காணாமல் போதல், சட்ட விரோத கொலைகள், சித்ரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாது காவலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்கப்படுவது குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு தீர்மானத்தின் நகல்கள் ஆவணங்கள் நேற்று முன்தினம் பேரவையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தகவலை கொழும்பு கெசட் இணைய தளம் உறுதி செய்துள்ளது.
இதன் மீது உறுப்பு நாடுகள் விவாதம் நடத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும். கூடுதலாக வாசகங்கள் சேர்ப்பது, நீக்குவது குறித்து யோசனை தெரிவிக்கப்படும். அதன் பிறகு தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.
வருகிற 22-ந்தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அன்றே ஓட்டெடுப்பு நடை பெறும் என்று தெரிகிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் உள்ள 47 உறுப்பு நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா இன்னும் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த குரல் காரணமாக இந்தியா கடைசி நேரத்தில் ஆதரவு முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும் தீர்மானம் நிறைவேறுவது உறுதி. அது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

No comments:
Post a Comment