Saturday, March 16, 2013
இலங்கை::இலங்கைக்கு சென்றால், தமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வளித்தல், கண்ணிவெடி அகற்றல், மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளை காணமுடியும் என இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையை கட்டியெழுப்ப அந்த நாடுகள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என எண்ணும் எவராவது இருந்தால், அவர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என தாம் பரிந்துரை செய்வதாகவும் அகாஷி குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு பின்னர், இலங்கையின் அபிவிருத்தி வளர்ச்சியடைந்துள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கை, 4 வருடங்களுக்கு முன்னர், போர் முடிவடைந்த போது, பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. போருக்கு பின்னர் அதிகளவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவளிப்பது பெரும் கஷ்டமான காரியம் என்ற போதிலும் இலங்கை அதனை நிறைவேற்றியது எனவும் அகாஷி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment