Tuesday, March 26, 2013

தமிழகத் தாக்குதல்களின் பின்னணியில் நாட்டை அழிக்க தருணம் பார்த்திருக்கும் புலம்பெயர் புலிகள் ஆதரவு குழுக்கள்!

Tuesday, March 26, 2013
இலங்கை::தமிழகத் தாக்குதல்களின் பின்னணியில் நாட்டை அழிக்க தருணம் பார்த்திருக்கும் புலம்பெயர் புலிகள் ஆதரவு குழுக்கள்!

அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்த யோசனை காரணமாக இலங்கையின் உண்மையான நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடிந்துள்ளதாக ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா யோசனை மற்றும் இலங்கையின் எதிர்காலம் குறித்து தமது கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நண்பன் என்ற போர்வையில் எதிராக செயற்படும் நாடுகள் எவை என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகளின் கொள்கைகளுக்கு முரணாக மனித உரிமை பேரவை செயற்பட்டு வருகிறது.

இலங்கையில் 30 வருடங்கள் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எவரும் பேசுவதில்லை.  புலிகள் மதகுருமாரையும், பிக்குகளையும், குழந்தைகளையும், பெண்களையும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர்.

அதேவேளை தம்பதிவுக்கு செல்லும் பிக்குமார் தமிழகத்தில் தாக்கப்படுவது விரோதமானது. இந்த தாக்குதல்களின் பின்னணியில், நாட்டை அழிக்க தருணம் பார்த்திருக்கும் புலம்பெயர் புலம்பெயர் புலிகள் ஆதரவு குழுக்கள்  உள்ளனர் எனவும் சீலாரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment