Tuesday, March 19, 2013

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது: கருணாநிதி அறிவிப்பு!

Tuesday, March 19, 2013
சென்னை::ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது என தெரிவித்தார்.மேலும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் திமுக மத்திய அமைச்சர்கள் இன்றே பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக அவர் காரணம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார்கள் என்று கூறினார் கருணாநிதி.......

இலங்கை தமிழர் பிரச்னையில் ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க.,விலிருந்து விலகிக்கொள்வதாக அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்வார்கள். மத்திய அரசுக்கு வெளியில் இருந்தும் ஆதரவில்லை. இந்த பிரச்னையில் தி.முக.., கொடுத்துள்ள யோசனைகளை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் இந்த முடிவை வாபஸ் பெறுவோம் என்றார்.

சொல்வதற்கு ஒன்றுமில்லை:சோனியா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து பேசிய அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை மீறல் சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் வரும் 21ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க்குற்றம், இனப்படுகொலை என, அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா. மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தனித்தனியாக தி.மு.க., தலைவர் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.இலங்கைக்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., நீடிப்பது சந்தேகம் என, கருணாநிதி மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் நேற்று சென்னையில் கருணாநிதியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், கருணாநிதியின் கோரிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரிடம் எடுத்துச்சொல்வோம். அவர்கள் இது குறித்து இறுதி முடிவெடுப்பார் என கூறிவிட்டு சென்றார். இதனால் இந்த பேச்சுவர்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இலங்கை தீர்மானம் தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

சோனியா உறுதி: இதனிடையே இலங்கை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், மனித உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.

இத்தாலி கடற்படை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை போல் எந்த நாட்டிலும் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளார்.

அமைச்சர்கள் ராஜினாமா? இதனிடையே காங்கிரஸ் நிலையில் ஏமாற்றமடைந்துள்ள தி.மு.க., அமைச்சர்கள் இன்று மாலை தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, ஐ.நா., மனித உரிமை மீறல் விவகாரத்தில், இந்தியாவில் நிலையை விளக்குவதற்காக, ஐ.நா., மனித உரிமை மீறல் அவையின் இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹாவை டில்லி வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..........

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்த கருணாநிதி, மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இலங்கை தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சேவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் விலகல்

மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியது.இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதாக கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து டெல்லியில் திமுக மத்திய அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்தனர்.

பரிசீலிக்கத் தயார்

திமுக கூறியது போன்று தீர்மானம் கொண்டுவந்தால் முடிவை பரிசீலிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் கொண்டு வருவதற்கு மார்ச் 21 வரை கால அவகாசம் உள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment