Sunday, March 3, 2013

தமிழ்நாடு மக்கள் இயக்கம் (புலிகளின் ஆதரவு) அறிவிப்பு இலங்கை தூதரகம் நாளை முற்றுகை!

Sunday, March 03, 2013
சென்னை::வரும் மார்ச் 4ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் (புலிகளின் ஆதரவு) கண.குறிஞ்சி தெரிவித்தார். அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.நா. சபை மனித உரிமை குழு கூட்டம் மார்ச் 4ம் தேதி ஜெனிவாவில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் புலம்பெயர் (புலி ஆதரவு) தமிழர்களுடன் இணைந்து ‘‘ஈழத்தோழமை நாள்’’ என அறிவித்து. மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது, சென்னையில் உள்ள இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.மதிமுக பொதுச் செயலாளர் (புலி) வைகோ கூறுகையில், இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ள கொலைகளுக்கு ஐ.நா உரிய தண்டனை வழங்கவேண்டும். (புலிகளுக்கு) தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும். ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகவும், தீர்மானத்துக்கு ஆதரவான நிலையையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த சந்திப்பின் போது (புலிகளின்  ஆதரவு மன நோயாளிகள்) புலமைப்பித்தன், கவிஞர் தாமரை, உலகதமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment