Friday, March 01, 2013
இலங்கை::இந்த நாட்டு அரசியல் வாதிகள் தீர்க்க தரிசனத்துடன் செயற்ப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விஜயகுமாரதுங்கவின் 25வது நினைவு நாள் நேற்று கண்டியில் இடம்பெற்றது.
இதன் போதே சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொதுமக்களின் பணத்தை கொள்ளையிடாது இருந்தமையினால் இன்னும் தமக்கு தலைநிமிர்ந்து நிற்க தைரியம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க குறிப்பிட்டார்.
நான் சிறிதளவேனும் வெட்கப்பட போவதில்லை. எந்த இடத்திற்கும் செல்ல முடியும். ஏன் தனக்கு சொந்தமில்லாத ஒரு சதத்தையேனும் நான் எந்த சந்தர்ப்பத்திலும் தொட்டது கிடையாது.
சிலர் தற்போது தன்னுடன் பேசுவதற்கும் அஞ்சுவதாகவும் தன்னுடன் பேசக் கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சி காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அரசாங்கம் போரில் வெற்றிப்பெற்றதாகவும் இதனை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா அறிவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது ஆட்சியின் போது, கிபீர் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டது எனவும் ஒரு விமானத்தின் விலை 150 கோடி ரூபா எனவும் அந்த நிலையிலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற விஜயகுமாரணதுங்கவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைத்து கட்சிகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை இணைத்து கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment