Sunday, March 17, 2013
புதுடெல்லி::மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகினாலும் அரசுக்கு ஆபத்து இல்லை என்று கருணாதிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கமிஷன் தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானம் நிறைவேறினால் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவார். இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் மட்டுமல்லாது இடதுசாரி கட்சிகளும் கோரி வருகின்றன. மேலும் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள விஞ்ஞானம் மற்றும் கலைக்கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை அறிவித்தாலும் போராட்டத்தை தொடருவோம் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். அப்படி இருந்தும் தீர்மானம் குறித்து மத்திய அரசு தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ராஜபக்சேவுக்கு எதிராக வலுவான திருத்தத்துடன் மத்திய அரசு ஆதரித்து ஓட்டெளிக்க வேண்டும். இல்லைவிட்டால் மத்திய அரசில் தி.மு.க. நீடிப்பதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றார். அதாவது மத்திய அரசுக்கு மிரட்டல் விடும்படி கருணாநிதி கூறியிருந்தார். இந்த மாதிரி மத்திய அரசுக்கு கருணாநிதி பல முறை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையொட்டி முன்பு மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் சென்னை வந்து கருணாநிதியை சமாதானப்படுத்தி சென்றனர்.
ஆனால் இந்த தடவை கருணாநிதி விடுத்துள்ள மிரட்டலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகினாலும் கவலை இல்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ், முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி மற்றும் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வரும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து அரசியல் ஸ்டண்ட் நடத்துவது கருணாநிதியின் வழக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

No comments:
Post a Comment