Sunday, March 10, 2013
இலங்கை::இதற்கிடையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அரசாங்கம் ராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொது செயலாளர் வசந்தபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை சாதாரண கொள்கை ஒன்றையே அரசாங்கம் பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த பிரேணை கடந்த வெள்ளிக்கிழமை வெளிப்பட்டது.
இதில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவிடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரணமாகவே இன்னும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகார பகிர்வு தொடர்பில் வெற்றிகரமான தீர்வு ஒன்றை பெற்று;க கொள்ள முடியாது போனது என்தை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
இதற்காக தெரிவுக் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை.
அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து தீர்வுக் குறித்த செயற்பாடுகளை தாமதிக்க செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு பொறுப்பாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றுமொரு விடயமான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் தொடர்பில் எமது செய்தப்பிரிவு அவரிடம் கேள்வி எழுப்பியது.
இந்த பரிந்துரைகளை ஒரே இரவில் அமுலாக்கிவிட முடியாது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் அவற்றை அமுலாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அமெரிக்காவும் - இந்தியாவும் இலங்கைக்கு முக்கியமான நாடுகளாக உள்ள நிலையில், இந்த பிரேரணையினால் அந்த நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளில் சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர ரீதியான உறவுகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அமைச்சர் இதற்கு தெரிவித்தார்.
இந்த நாடுகளுடனான ராஜதந்திர உறவு சிறந்தமுறையில் உள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கோ அல்லது அமெரிக்காவின் நிலை;பாட்டுக்கோ இலங்கையால் இணங்க முடியாமல் போகலாம்.
அது இந்த நாடுகளுக்கு இடையிலான உறவை நேரடியாக பாதிக்காது என்று தெரிவித்தார்.
இதேவேளை இந்தியா ஒருவேளை இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாக இருந்தால், இந்தியா தொடர்பில் இலங்கை எந்த நிலைப்பாட்டில் இருக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது.
இந்திய அரசாங்கத்திற்கு இருக்கின்ற பிரச்சினைகளை இலங்கை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தனியான கட்சி ஒன்று இல்லை. அது பல்வேறு கட்சிகளின் கூட்டாக உள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இலங்கையுடான உறவு குறித்து மாத்திரம் இன்றி, தொடர்ந்து ஆட்சி நடத்துவது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment