Tuesday, March 26, 2013

இந்திய மீனவர்களால் கடத்திவரப்பட்ட ஹெரோயின் பார்சலைக் கடற்பரப்பில் வைத்து கைமாற்றிய போது கையும் மெய்யுமாக பிடித்தோம்:கடற்படை அதிகாரி நீதிமன்றில் சாட்சியம்!

Tuesday, March 26, 2013
இலங்கை::வடபகுதி கடலில் மீன் பிடிக்க வரும் இந்திய வள்ளங்கள் இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கொண்டு வருவதாக மீண்டும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்திய வள்ளத்தில் இருந்து யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28ந் திகதி ஹெரோயின் போதைபொருள் பார்சல் கைமாறிய போது எட்டு பேர் கைதாகினர். இது தொடர் பான வழக்கில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவர் இலங்கை மீனவர்கள் ஆவார். ஐவர் இந்திய மீனவர்கள் ஆவர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இந்த வழக்கை விசாரித்தார்.

வட பகுதி கடல் பரப்பில் 955.4 கிரேம் ஹெரோயின் போதைப் பொருளை விற்றமை இறக்குமதி செய்தமை அதிக குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

போதைப்பொருள் வைத்திருந்தமை இலங்கை மீனவர் மீதான குற்றச்சாட் டாகும்.

இந்திய வள்ளத்தில் இருந்து டிங்கி படகில் இருந்த இலங்கையர்களுக்கு ஹெரோயினைக் கொடுக்கும் போது இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோனின் வழி நடத்தலில் லெப்டின்ட் கமாண்டர் சரித்த குணவர்தன சாட்சியம் அளித்த சம்பவம் தொடர்பாக விபரித்தார்.

டிங்கி படகு இந்திய படகுக்கு அருகில் வந்த போது நாம் வேகமாக அதன் அருகில் சென்றோம்.

சட்டவிரோத பொருளை மாற்றிக் கொள்ளவே இரு வள்ளங்களும் அருகருகே கொண்டு செல்லப்பட்டதை நாம் அறிவோம்.

டிங்கி படகில் இலங்கை தமிழ் மீனவர்கள் இருந்தனர். இரு படகுகளும் இணைந்த போது இந்தியப் படகிலிருந்து இலங்கையர்கள் இருந்த படகுக்கு பார்சல் வழங்கப்பட்டது.

பார்சல் கைமாறியது. எமது கமெராவில் பதிவாகியது. டிங்கி படகில் மூவரும் இந்தியப் படகில் ஐவரும் இருந்தவர் படகை நிறுத்துமாறு உத்தரவிட்டோம். பிளாஷ் விளக்கை அடித்தோம். டிங்கி படகில் இருந்தவர் வாயால் எடுத்து பார்சலை கடலில் வீசினார். ஹேரத், விஜேவந்த ஆகிய இரு அதிகாரிகள் டிங்கி படகில் ஏறி அதனை எடுத்து என்னிடம் பார்சலுடனும் அந்த நபருடனும் ஒப்படைத்தனர்.

ஹேரத் கடலில் பாய்ந்து மிதந்த இரு பார்சல்களைக் கொண்டு வந்து தந்தார்.

இந்தியப் படகு வேகமாக இந்தியா நோக்கிச் சென்றது. விரட்டிச் சென்று நாம் அதனையும் கைப்பற்றினோம். அங்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை.

எமது கடல் எல்லைக்கு 18, 19 மைல் தூரத்தில் நாம் இருந்தோம். அங்கிருந்த இத்தியர்களையும் எமது பொறுப்பில் பாரம் எடுத்தோம்.

பார்சலை பெற்றுக் கொண்டோர் யாழ்ப்பாணம் குருநகர் வாசிகள் எதிர்ப்பதை அறிந்து கொண்டோம். பார்சல் பட்டிகளால் கட்டப்பட்டிருந்தது.

செங்கல்லின் அளவில் பார்சல்களில் போதைப்பொருள் இருந்தது என்றும் தெரிவித்தார்.

எம். கமல் கிரிவட்டியன், கிரனிராசா கல்பன் ஞானப்பிரகாசன் துஷ்யந்த ஆகிய குருநகர் மீனவர்கள் மூவரும் மரிய லைலா யமர்ஷன், ராயப்பன் வில்சன், குலநிசாமி பிரசாத், சன்பிடோ செல்வலெங்கம், பழநிதரன் ஒகஸ்டஸ் ஆகிய இந்திய மீனவர்கள் மூவரும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment