Thursday, March 14, 2013
இலங்கை::புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் வவுனியா சிறைச்சாலையில் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை அந்த சிறைச்சாலையில் தடுத்துவைப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர்களை அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் சந்தேக உறுப்பினர்கள் மட்டுமன்றி நீண்டகால தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளையும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இடமாற்றப்பட்ட சிறை கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையிலேயே தொடர்ந்து தடுத்துவைக்கபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புனரமைப்பு பணிகளுக்காக முடப்பட்டிருந்த வவுனியா சிறைச்சாலை நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment