Sunday, March 17, 2013
இலங்கை::யுத்தத்தின் போது வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் கொழும்பு நகரிலும் செளகரியமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினருக்கும்: வெளி நாடுகளில் ஆடம்பர வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் புலிகள் ஆதரவு புலம்பெயர்ந்த தமிழர்களின் சில குழுக்களுக்கும் இலங்கையில் தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்காவின் தலைமைத்து வத்தின் கீழ் கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினரும் இங்கிருந்து புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவு தமிழர்களின் தேசப் பற்றற்ற சில குழுக்களும் ஆதரவு அளித்துக்கொண்டி ருக்கும் இவ்வேளையில் வடக்கில் உள்ள வவுனியா, கிளி நொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சமீபத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நம் நாட்டில் உள்ள தேசத்துரோக சக்திகளுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.
30 ஆண்டுகால யுத்தத்தின் போது துன்பத்தில் மூழ்கி இருந்த வட பகுதியைச் சேர்ந்த இந்த அப்பாவி மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீங்கிழைப்பதற்கு சில அரசியல்வாதிகளும், சர்வதேச அமைப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகளை கண்டிக்கும் முகமாக இந்த ஆர்ப் பாட்டம் நடத்தப்படடது.
யுத்தத்தின் போது வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் கொழும்பு மாநகரிலும் செளகரியமாக வாழ்ந்து கொண்டி ருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வெளி நாடுகளில் ஆடம்பர வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் சில குழுக்களுக்கும் இலங் கையில் கஷ்டப்படும் தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என்று இந்த ஆர்ப்பாட்ட த்தின் போது பொதுமக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் நிலை கொண்டிருக்கும் இவ்வேளையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் மீது உண்மையான அக்கறை இருப்பின், அவர்கள் அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு முன் வருவது அவசியமாகும்.
இத்தகைய நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து அதற்கான சிறந்த தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதற்குப் பதில் பாராளுமன்றத் தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்து வதற்கான தங்கள் நிலைப்பாட்டை அங்கு அறிவித்து, அதுகுறித்து ஏனைய அங்கத்தவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு கலந்துரையாட லுக்கு வழி வகுக்க வேண்டும்.
இவ்விதம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பலதரப் பட்ட கருத்துக்களை பல அரசியல் குழுக்களும் முன்வைக்கும் போது, பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தரத் தீர்வை இனப்பிரச்சினைக்கு ஏற்படுத்துவதற்கான எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய யோசனைகளும் அனைவரின் பரிசீலனைக்கும் வரக்கூடிய சாதகமான சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தாங்கள் கலந்து கொண்டாலும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்ற பிடிவாதப் போக்கை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக கைவிட்டு இக்கூட்டத் தொடரில் கலந்துகொள்வது அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நம் நாட்டு மக்கள் குறிப்பாக வட பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களின் இந்த அபிலாஷை நிறைவேற வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுவது அவசியமாகும்.
வெளிநாட்டு அரசாங்கங்களோ வெளிநாடுகளில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களோ இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதை பகிரங்கமாக ஆதரிப்பதைப் போன்று நடித்தாலும் அவை உண்மையிலேயே இலங் கையில் தொடர்ந்தும் இனப்பிரச்சினை சம்பந்தமான கருத்து மோதல்கள் இருப்பதையே மனதார விரும்பு கின்றன என்பதை கடந்த கால நிகழ்வுகள் எமக்கு நிச்சயம் ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது.
எங்கள் நாட்டுப் பிரச்சினையை நம்நாட்டு மக்களே கருத்து மோதல்கள் இருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிப் பேசி நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். எங்கள் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு எங்களுக்கு வெளிநாட்டவர்களின் அனுசரணையோ உதவியோ அவசியம் இல்லை. அவ்விதம் வெளிநாட்டு அரசாங்கங்கள் இப்பிரச்சினைக்கு அனுசரணையாளர்களாக செயற்பட்டாலும் அது நிச்சயம் தீராத பிரச்சினையாக தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதற்கு கடந்தகால நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.
உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வே மக்களின் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும். அதைவிடுத்து எங்கள் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்ப்பது நிச்சயம் தோல்வியிலேயே முடிவடையும் என் பதை நம்நாட்டு மக்கள் இன்று தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியாவின் உதவி யைப் பெற்றால் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய நிரந்தர தீர்வு ஏற்படும் என்று எமது மக்கள் அன்று நம்பி இருந்தார்கள். இந்திரா காந்தி உதவி செய்வார், ராஜீவ் காந்தி உதவி செய்வார் என்றெல்லாம் நம்பி இருந்த எங்களுக்கு இறுதியில் கிடைத்த பலன் என்ன? இறுதியில் யுத்தமும் மனித உயிர் அழிவும் சொத்துக்களின் அழிவும் சொந்த மண்ணில் அகதிகளாக மாறும் அனர்த்தமும் மட்டுமே பிரதிபலனாகக் கிடைத்தது.
கடந்த கால வேதனைக்குரிய நிகழ்வுகளை மனதில் கொண்டு எமது பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்றுகூடி பேசித் தீர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்துகொண்டு யதார்த்தபூர்வமாக நடப்பது அவசியமாகும்.











No comments:
Post a Comment