Friday, March 01, 2013
சென்னை::இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளதென இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள பிரேரணையை நிராகரிப்பதற்கான இயலுமை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தற்போது சிறந்த திசையில் பயணிப்பதாகவும் அதனை ஊக்குவிப்பதற்கு மேலதிக கால அவகாசமும் சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை சமர்ப்பிக்கும் நடவடிக்கை அநாவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக நாடு என்பதால் அதற்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment