Sunday, March 17, 2013
கோவை::இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் கோவையில் உள்ள ம.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் சரவணன் மயங்கியதால் ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.
இன்று 7-வது நாளாக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது. அவர்களை அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பாரதியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 50 பேர் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நாளாக இன்று உண்ணாவிரதம் நீடிக்கிறது. உண்ணாவிரத பந்தல் அருகே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment