Wednesday, March 6, 2013

(புலிகளின் ஆதரவு) சேனல் 4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலாம் மேக்ரே சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவிலிருந்து மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!!

Wednesday, March 06, 2013

சென்னை::(புலிகளின் ஆதரவு) டெசோ சார்பில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடத்தியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு சேனல் 4 தயாரிப்பாளர் கெலாம் மேக்ரே தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இரு ந்து புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் டெசோ அமைப்பின் சார்பில் நடந்தது. இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன படுகொலை கண்டித்தும், 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரக் கொலையைக் கண்டித்தும், ஜெனீவாவில் உள்ள மனித உரி மை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்காக (புலிகளின் ஆதரவு) சேனல் 4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலாம் மேக்ரே சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவிலிருந்து மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 
 உரிய நேரத்தில் இப்போராட்டத்தை அறிவித்த டெசோ தலைவர் கருணாநிதிக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.அப்போது, மு.க.ஸ்டா லின், கெலாம் மேக்ரேயிடம், தாங்கள் இலங்கை யில் நடைபெற்ற ஈழப் போரில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களை யும், ஈழத்தமிழர்களின் துயரங்களையும் சேனல் 4 மூலமாக உலகத்திற்கு உண்மை நிலையை வெளிப்படுத்தியதற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்

No comments:

Post a Comment