Sunday, March 17, 2013

புத்தபிட்சு மீது தாக்குதல் எதிரொலி: சென்னையில் புத்தமடம் உள்ளிட்ட 4 இடங்களில் போலீஸ் குவிப்பு!

Sunday, March 17, 2013
சென்னை::தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த புத்தபிட்சு ஒருவரை தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஓடஓட விரட்டி துரத்தியடித்தனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இலங்கை அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் கென்னத்லேனில் உள்ள புத்தமடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான சிங்களர்கள் வந்து தங்குகிறார்கள்.

புத்தபிட்சுகளும் வருகை தருகிறார்கள். தற்போது அங்கு 140 சிங்களர்களும், 12 புத்த பிட்சுகளும் தங்கியுள்ளனர். இதனால் இங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் காஜா மேஜர் ரோட்டில் உள்ள இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 சில நாட்களுக்கு முன்பு முன்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment