Saturday, March 16, 2013

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு!

Saturday, March 16, 2013
இலங்கை::கச்சத்தீவு அருகே 14-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் 19 மீனவர்களை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 34 பேர் நேற்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று எச்சரித்து விடுதலை செய்தார்.

விடுதலை செய்யப்பட்ட 34 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இன்று இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று இரவு கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment