Tuesday, March 26, 2013

சம்பூரில் மீள்குடியேறிய 139 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்!

Tuesday, March 26, 2013
இலங்கை::யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்களில் 139 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சம்பூர் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

சம்பூர் கூனித்தீவு மற்றும் நவரத்னபுரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வந்தவர்ககளே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக வீடுகள் சிலவற்றில் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் டீ.டீ.ஆர்.சில்வா மற்றும் 224ஆவது படையணியின் தளபதி கேணல் விக்கும் லியனகே ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment