Wednesday, February 20, 2013
இலங்கை::வடமாகாணத்தின் தமிழர்களது காணி விடயத்தில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இரட்டை வேடம் பூண்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு நீதிமன்றம் சென்றதாகவும், தற்போது அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு உணவுத்தவிர்ப்பில் ஈடுபடுவது போல நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கில் தமிழர்களின் காணிகளை மீண்டும் வழங்குமாறு தமிழ் தேசி (புலி)கூட்டமைப்பு கோருகிறது.
எனினும் இலங்கையின் எந்த பகுதியிலும் தமிழர்களின் காணி என்றோ, சிங்களவர்களின் காணி என்றோ இல்லை என்றும், அனைத்து இலங்கையர்களுடையது என்றும் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் கிளிநொச்சியில் வைத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், இந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி இருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன், தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இவ்வாறு இரண்டு பிரச்சினைகளை எழுப்புகின்ற நிலையில், எவ்வாறு இந்த காணிகளை மீண்டும் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாணத்தின் தமிழர்களது காணி விடயத்தில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு இரட்டை வேடம் - ஜனக பண்டார தென்னகோன்!

No comments:
Post a Comment