Monday, February 18, 2013

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை - இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Monday, February 18, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.

இராணுவப் பேச்சாளர்

சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தெரிவித்தார்.

வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எதிர்க் கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய :-

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இரா ணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன் றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.

யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன், மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக மக்கள் நலன் கருதி இராணுவம் பாரிய அபிவிருத்தி, நலன்புரி வேலைத் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

வடக்கில் பயங்கரவாதிகளால் புதைக் கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை யுத்தத் திற்கு பின்னர் அகற்றி வடபகுதி மக்களை துரிதமாக மீள் குடியமர்த்தும் பணிகளை இராணுவம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment