Friday, February 1, 2013

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்

Friday, February 01, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்இ கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் வட்டார ரீதியான எல்லை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன......

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் உயர் மட்டக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையில் நடைபெற்றது.
இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் பிரதேச செயலகங்களுடன் பேசி உடனடி நடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாள் எம்.எஸ்.எம்.சஜி தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட் பூ.பிரசாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை உள்ளூராட்சி சபை நிறுவனங்களின் கீழ் பிரதேச எல்லை நிர்ணயம் செய்து முடிக்கப்படும் வரை மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்பட மாட்டாதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment