இலங்கை::இத்தாலிக்கான இலங்கை தூதுவர் மீளழைக்கப்பட்டுள்ளார்.
இத்தாலிக்கான இலங்கை தூதுர் ஹர்ச டி சில்வா தமது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து கடந்த தினத்தில் ரோம் நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தூதுவர் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அசித்த பெரேரா குறித்து ரோமின் தம்மாலோக்க விகாரையின் விகாராதிபதி தம்பதெனிய தம்மாராம தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, இத்தாலிக்கான இலங்கை தூதுர் ஹர்ச டி சில்வா மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment