Wednesday, February 20, 2013
இலங்கை::புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் புலிகளின் பிரிவினைவாத இலட்சியம் இன்னும் உள்ளது - இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!
சர்வதேச பிரிவினைவாதிகளின் தற்போதைய தந்திரோபாயம், சர்வதேசத்தை பிரயோகித்தல் என்பதை ஒட்டியுள்ளதாக அமைந்துள்ளது. இவர்கள் நேர்மையான வழிகளை பின்பற்றுவதில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
'அவர்கள் பொய்கள், அரை உண்மைகள், கட்டுக்கதைகள், வதந்திகளை பரப்பி வருகின்றனர்' என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஊடகங்களிலுள்ள எமது நண்பர்கள் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பற்றி பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாத இலட்சியம் இன்னும் உள்ளது.
இலங்கையை கூறுபோட பல பிரிவினை ஆதரவு இயக்கங்கள் செயங்படுகின்றன. அவர்களது தற்போதைய தந்திரோபாயம் சர்வதேச அழுத்தத்தை பிரயோகித்தல் என்பதை ஒட்டியதாக அமைந்துள்ளது. இவர்கள் நேர்மையான வழிகளைப் பின்பற்றுவதில்லை. அரை உண்மைகள், கட்டுக்கதைகள், வதந்திகளை பயன்படுத்துகின்றனர்.
இலங்கைப் படைகளுக்கு எதிரான ஆதாரமற்ற பல குற்றங்கள் சுமத்தப்படுவது இது தான் முதல் தடவையல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நெருங்கும்போது இவை வரும். ஆதன் பின்னர் தாமதமாகவே அவை அடங்கிவிடும்.
இந்த கூட்டத்தினர் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு அவை தீர்க்கப்படுவதை விரும்புவதில்லை போலத் தெரிகின்றது. முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஒழுங்கான ஒரு முறைமை உள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே சில முறைப்பாடுகளை விசாரித்து வருகின்றது.
குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான அக்கரை இருப்பினர் அவர்கள் இணையம் மற்றும் வேறு ஊடகங்களூடாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் ஆதாரங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். அப்போது நாம் இந்த பிரச்சினைக்கு இறுதி முடிவை காண்போம்.
மேலதிக தகவல்களைப் பின்வரும் விலாசத்தில் பெற முடியும். http://www.defence.lk/war_crimes.asp சென்று அறிந்துகொள்ள முடியும். வடக்கு கிழக்கில் நடப்பதை அறிவதற்கு அங்கு வந்து மக்களுடன் பேசுவதே அதி சிறந்தது.
புலிகளின் மனிதக் கவசங்களாக இருந்த அனுபவம் கொண்ட இங்கு வாழும் மக்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களை விட நன்கு அறிவர். முனிதாபிமான நடவடிக்கையின்போதும் அதன் பின்னரும் நடந்தவற்றை அவர்களே நன்கறிவர். தமது உறவுகளைக் காப்பாற்ற இராணுவம் பட்ட பாட்டை நேரில் கண்டவர்கள் அவர்கள்.
ஆயினும் சர்வதேச சமுதாயத்தின் சில பிரிவினர் உண்மை நிலையை திரிபுபடுத்த முயல்கின்றனர். இலங்கைக்கு வருபவர்களுக்கு உண்மை தெரியும். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற குழுவின் கருத்துக்களை பின்வரும் இணையத்தளத்தின் காண்க. http://www.defence.lk/new.asp?fname=Sri_Lanka’s_revival_An_unbiased_view_20130210_04
No comments:
Post a Comment