Monday, February 18, 2013

வெளிநாடு செல்லும் நோக்கில் சிசு கொலை; நால்வர் கைது!

Monday, February 18, 2013
இலங்கை::சிசுவொன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புத்தளத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்த உடனேயே குறித்த சிசு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட சிசுவின் தாய், தந்தை மற்றும் இரண்டு பெண்கள் ஆகியோரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான தாய் 22 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தாய் வெளிநாட்டிற்கு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் இருந்ததுடன் அவரது பயணத்திற்கு தடையாக அமையலாம் என்ற அச்சத்தில் சிசு கொலை செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment