இலங்கை::இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடாத்தவிருந் போரட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய மீனவர்களுக்கு எதிராக பாக்கு நீரிணையில் ஐயாயிரம் படகுகளுடன் பாரியளவில் போராட்டமொன்றை நடாத்த அமைச்சர் திட்டமிட்டிருந்தார்.எனினும், திடீரென இந்தத் தீர்மானத்தை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்திற்கு பதிலாக இந்திய அதிகாரிகளுடன் மீனவர்களின் அத்து மீறல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு நேரும் அநீதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment