Wednesday, February 06, 2013
இலங்கை::விரைவில் வடபகுதியில் ஐந்து கைத்தொழில் வலயங்களும் அதிகமான சுற்றுலா வலயங்களும் உருவாக்கப்படவுள்ளன. கைத்தொழில் வலயங்கள் யாழ்ப்பானம்,வவுனியா,கிளிநொச்சி,மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் மண்டைதீவு,காரைதீவு கைதடி போன்ற பிரதேசங்களில் சுற்றுலா வலயங்களும் நிறுவப்படவுள்ளன.
அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட வடபிரசேத்தில் கைத்தொழில் மற்றும் உல்லாசத்துறை வலயங்களை நிறுவுவதன் மூலம் புதிய தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என நம்புகின்றது.
புதிதாக நிறுவப்படவுள்ள இக்கைத்தொழில் பேட்டைகளின் மூலம் சுமார் 50000நேரடி மற்றும் 20000 மறைமுக தொழில்வாய்ப்புகளையயும் ஏற்படுத்திக்கொடுக்கமுடியுமென அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்துக்கமைய பழ உற்பத்தி, கோழிவளர்ப்பு, மீன்பிடித்துறை, சீனி உற்பத்தி மற்றும் கூரைத்தகடு உற்பத்தி போன்ற பல திட்டங்களுக்காக அதிகமான முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக ஏற்கனவே முன்வந்துள்ளதாக வட மாகான ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்ரசிரி தெரிவித்தார்.அத்துடன் கரும்புச் செய்கைக்காக 5000 ஹெக்ரயர் நிலப்பிரதேசம் அடையாளம் காணபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா வலயங்களில் பறவைகள் சரனாலயங்கள்,கோல்ப் மற்றும் ஏனைய விளையாட்டு மைதானங்கள் கடல் சவாரிக்கான வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்படவுள்ளதுடன் பல நட்சத்திர ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment