Monday, February 25, 2013
இலங்கை::அரசாங்க தகவல் துறை அமைச்சின் இணைக்களத்திற்கு இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் றறற.அநனயை.பழஎ.டம என்ற இணையத்தளம் இவ்வாறு குறுகிட்டதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார்.
புலிகளின் ஆதரவாளர்களால் இவ்வாறு இணையத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசாங்க தகவல்துறை இணையத்தளத்தினை வழமைக்கு கொண்டுவர முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் தகவல் தொழிநுட்ப மற்றும் தொலை தொடர்புகள் பிரதியமைச்சின் பணிப்பாளர் வசந்த தேசப்பிரியவிடம் எமது செய்தி சேவை வினவியது.
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களாகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment