Tuesday, February 26, 2013
வேலூர்::இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி (கொலைகார புலிகளுக்கு வக்காளத்து வாங்கும்) அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா, ஜரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்திய அரசு மவுனமாக உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்றுபட்டு இங்குள்ள எம்.பி.கள்., எம்.எல்.ஏ.கள், ஒன்றுபட்டு டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும்.
டெசோ என்றாலே மக்கள் சிரிக்கின்றனர் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை ஆகியவற்றை கண்டுகொள்ளவில்லை இதற்கு தீர்வுகான தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இலங்கையில் தொடர்ந்து தமிழ் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
அடுத்த மாதம் 22-ந் தேதி ஜெனீவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. இதில் நான் கலந்து கொள்கின்றேன். இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமான அதிபர் ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தமிழக மீனவர்கள் படுகொலையை இவ்வளவு காலமும் கண்டுகொள்ள வில்லை. தற்போது திடீர் பாசம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசுகிறார்.
இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைக்க வேண்டும். 6 நாடுகளில் போர் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1 1/2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment