Tuesday, February 19, 2013

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் எதிர்பார்ப்பு!

Tuesday, February 19, 2013
இலங்கை::கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுலநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டிலும் பொதுநலவாய வர்த்தக அமைப்பிலும் பங்கேற்க சிங்கப்பூர் அரசு எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வெளிவிகார அமைச்சர் கே.சன்முகம் தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தவேளையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டிருப்பதானது மக்களுக்கு மாத்திரமன்றி அப்பிராந்தியத்துக்கே நன்மை பயக்கக்கூடியதாயுள்ளது. இலங்கைக் கடற்படையினர் இந்து சமுத்திரத்திலும் வங்காள விரிகுடாவிலும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வெளிநாட்டு வர்த்தகம் சாதகமாக இடம்பெற உருதுணையாக அமைந்துள்ளது, என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.

சிங்கப்பூர் அமைச்சர் குறிப்பிடுகையில், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்வதைக்கானும்போது மகிழ்ச்சியாகவிருக்கின்றதெனக் கூறினார். மேலும் இலங்கையுடன் முதலீட்டிலும் வர்த்தகத்திலும் பங்காளியாக இணைந்து செயற்படத் தமது நாடு தயாராயுள்ளதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதால் கிடைக்கக் கூடிய வசதி வாய்ப்புக்களை தெளிவுபடுத்தினார்.

அமைச்சர் பீரிஸ் பொது நலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் ஷர்மாவின் இலங்கை விஜயத்தின்போது மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்தும் சிங்கப்பூர் அமைச்சருடன் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment