Thursday, February 14, 2013
புதுதில்லி::இந்தியா - பிரான்ஸ் இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்வதற்காக, பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட் இன்று புது தில்லி வந்துள்ளார்.
பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்களும், பல்வேறு தொழில்துறை தலைவர்களும், அதிபருடன் இந்தியா வந்துள்ளளனர். அவர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இந்திய விமானப் படைக்கு போர் ஜெட் விமானங்களை வாங்குவது குறித்தும், ஜெய்பூர் அணு உலைக்குத் தேவையான 6 ரியாக்டர்களை பிரான்ஸ் வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளது.




No comments:
Post a Comment