Monday, February 11, 2013
இலங்கை::சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக சிரேஷ்ட இராஜதந்திரியான வி.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசானா நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அஹமட் ஜவாத், இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சிரேஷ்ட இராஜதந்திரியான வி.கிருஷ்ணமூர்த்தியின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜதந்திர சேவையில் 33 வருட அனுபவம் கொண்ட இவர், தற்போது சார்க் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வருகின்றார்.
சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர் ஸ்தானிகராக இறுதியாக வி.கிருஷ்ணமூர்த்தி கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment