இலங்கை::தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளுடனான புகைப்படங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள இலங்கையின் சொத்துக்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேசப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment