Monday, February 4, 2013

அமெரிக்கவுடன் உறவுகளை வலுப்படுத்தி கொள்ள இலங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளது!

Monday, February 04, 2013
இலங்கை::அமெரிக்கவுடன் உறவுகளை வலுப்படுத்தி கொள்ள இலங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளராக ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடன் இலங்கை நல்லுறவை பேண விரும்புவதாகவும், இலங்கை - அமெரிக்காவிற்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை விரும்புவதாகவும் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment