இலங்கை::வடக்கில் யுத்தத்தின்போது புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட வாகணங்களை அதன் உண்மையான உரிமையாளரிடம் கையளிக்கும் செயற்திட்டமொன்று அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 5000 வாகணங்கள் அவற்றின் செசி இலக்கத்தைக்கொண்டு இணங்கானப்பட்டுள்ளன என மோட்டார் வாகண ஆணையாளர் நாயகம் எஸ் எம் ஹரிஸ்சந்ர தெரிவித்தார்.
பதிவாளர் நாயகத்தினால் மேற்படி வாகணங்கள் தொடர்பாக பெற்றுக்கொண்ட தகவல்கள் உரிய மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருபது பேர்கொண்ட அதிகாரிகள் குழுவொன்று மேலும் 2500 கைவிடப்பட்ட வாகணங்களின் தகவல்களைப் பெறுவதற்காக அடுத்தவாரம் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவுள்ளனர். எனவே வாகண உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தமது வாணங்களைப் பெற்றுக்கொள்ளலாமெனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment