Monday, February 11, 2013

விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

Monday, February 11, 2013
சென்னை::விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல். ஜெகன்தாக்கல் தாக்கல் செய்த மனுவில், ஹிந்து பத்திரிகையில் கடந்த 31-ந் தேதி கமலஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு விரோதம் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கை செய்தியாக வெளியாகி இருந்தது.

அதில் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமம் வழங்காததாலும், வேட்டி கட்டிய தமிழன் அடுத்த பிரதமராக வருவார் என்று ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசியதாலும் ஜெயலலிதாவுக்கு கமலஹாசன் மீது விரோதம் ஏற்பட்டது.இதனால் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது என செய்தி வெளியாகி இருந்தது.

இச்செய்தியால் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து பத்திரிகை ஆசிரியர், வெளியிட்டாளர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்திருக்கும் 10-வது அவதூறு வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment