Friday, February 08, 2013
தமிழ் நாட்டு அரசியலில் செல்லாக்காசாகி அந்நாட்டு மக்களால் அரசியல் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்பட்ட வைகோ, டாக்டர் ராமதாஸ், பழ நெடுமாறன்,திருமாவளவன், போன்றவர்கள் மீண்டும் தங்கள் மக்கள் ஆதரவை பெருக்குவதற்கு சில அரசியல் தந்திரங் களை தமிழ் நாட்டில் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தின் பணப்பலத்திற்கு சிரம் தாழ்த்தி அவ்வியக்கத்தின் ஆதரவாளர்களும், செல்வாக்குடையவர்களும் விதிக்கும் கட்டளை களை நடைமுறைப்படுத்துவதிலேயே இவர்கள் தீவிரமாக ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களை சந்தித்து, அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்கு வழியில்லையே என்று ஏங்கிக் கொண்டி ருந்த இவ்வாறான அரசியல் கோமாளிகள், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சமீபத்திய இந்திய விஜயத்தை ஒரு காரணமாக முன் வைத்து தங்கள் செல்வாக்கை அதிகரிப் பதற்கு எடுத்த முயற்சிகள் இப்போது தவிடுபொடியாகியுள்ளன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருகை தந்தால் “நான் புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதம மந்திரி மன் மோகன்சிங்கின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவேன்” என்று வீராவேசத் துடன் மார் தட்டி உரைநிகழ்த்திய வைகோவுக்கு புதுடில்லியில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்ததாக தமிழ் நாட்டில் பரவலாக பேசப் படுகிறது.
கடந்த தடவை இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்ற போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்காக வந்தது போன்று இந்தத் தடவையும் புதுடில்லிக்கு வந்து பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தால் பொலிஸார் குண்டா ந்தடி பிரயோகித்து அனைவரையும் விரட்டி அடித்து விடுவார்கள் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.
இந்த எச்சரிக்கை கிடைத்தவுடன் வைகோ பயத்தினால் மனம்மாறி விட்டார் என்றும் அங்கு மக்கள் அவரைப் பார்த்து கிண்டல் செய் யும் அளவுக்கு வைகோவின் அரசியல் சாணக்கியம் படுதோல்வி யடைந்துள்ளது.
புதுடில்லிக்கு சென்றால் குண்டாந்தடி பிரயோகத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொண்ட வைகோ, உடனடி யாக தனது ஆதரவாளர்களை கூட்டி, இந்தத் தடவை நான் புது டில்லிக்கு போக மாட்டேன். நீங்கள் போய் வெற்றிகரமாக ஆர்ப் பாட்டத்தை நடத்திவிட்டு வாருங்கள். எனக்கு தமிழ் நாட்டில் மற்ற எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறி அந்த அப்பாவி ஆதரவாளர்களை கடந்த புதன்கிழமை சென்னை எழும்பூர் புகையிரத நிலையத்தில் இருந்து வழியனுப்பிவிட்டு தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.
அவரைப் போலவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் புலிகளை பகிரங்கமாக ஆதரிப்பவரைப் போன்று நடித்துக் கொண்டு அரசியல் நடத்தி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். இவர் மட்டுமல்ல, பாட்டாளிகள் மக்கள் கட்சி யின் தலைவர் டாக்டர் ராம்தாஸ¤ம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவை அவமதித்து விட்டார் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை விட்டு தன்னை ஒரு பெரும் அரசியல் தலைவரைப் போன்று மக்கள் எண்ண வேண்டுமென்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
இவரது கட்சியை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கட்சியோ, கலைஞர் கருணாதியின் திராவிட முன்னேற்றக் கழகமோ இணைத்துக் கொள்ள மறுப்பு தெரிவித்ததில் இருந்து டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு தமிழ் நாட்டில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இவ்விதம் அரசியலில் செல்லாக்காசாகி இருக்கும் மக்கள் ஆதரவை இழந்துள்ளவர்களே இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட எத்தனித்து இப்போது மூக்குடைபட்டுள்ளார்கள்.
தமிழ் நாட்டு மக்கள் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் மீதோ, இலங்கை தமிழ ர்களைப் பற்றியோ அந்தளவுக்கு அக்கறையோ, அன்பையோ கொண்டிருக்கவில்லை என்பதை தமிழ் நாட்டில் பல்வேறு துறைக ளைச் சார்ந்தவர்களை சந்தித்து பேசும் போது நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த எங்களுக்கு மின்சார தட்டுப்பாடு, நீர்த்தட்டு ப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் இந்தளவுக்கு தலை நிறைய பிரச்சினைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை பிரச்சினையைப் பற்றி நாம் அந்தளவுக்கு அலட்டிக் கொள்வதில்லை என்றே பொதுவாக மக்கள் கருத்து தெரிவிப்பார்கள்.
இலங்கையில் யுத்தம் ஆரம்பித்த காலகட்டத்தில் நாம் இலங்கைத் தமிழர்களை ஆதரித்தோம். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின் னர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் தவறான செயற்பாடுகள் தமிழ்நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்த காரணத்தினால் இன்று தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கோ, எல்.ரி.ரி.ஈ. பிரிவினைவாதத்திற்கோ எவ்வித ஆதரவும் இல்லையென்று தமிழ்நாட்டின் பல சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் நாட்டு மக்கள் இலங்கையில் இன்று பூரண சமாதானம் நிலவுவது குறித்து மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் திறமைமிக்க தலைமைத்துவத்தினால் தான் இன்று இலங் கையில் சமாதானம் நிலவுகிறது. அதனால் தான் இப்போது எங்களு க்கு இலங்கைக்கு சென்று கதிர்காமம் போன்ற திருத்தலங்களை தரிசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென்று பெரும்பாலான தமிழ் நாட்டு மக்கள் மனம் விட்டு பாராட்டுகிறார்கள்.




No comments:
Post a Comment