Sunday, February 24, 2013

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது!

Sunday, February 24, 2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜீன் லெம்பர்ட், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.....

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்பத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகளில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு முனைப்புக்களில் தமிழ் மக்களை இணைத்துக்கொள்ளாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment