Monday, February 18, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது மூன்றரை மணி நேர விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
எனினும் கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இவ்விசாரணைகளின் போது சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் மற்றும் ஜ.தே.க பிரதி தலைவர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோருடன் இளநிலை சட்டத்தரணியான சயந்தனும் நேரில் சமூகமளித்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தனது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் மற்றும் குறுந்தகடுகள் இராணுவ தகவல்கள் தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்றதாக (புலி)கூட்டமைப்பின் சிறீதரன் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.
குறிப்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் தனிப்பட்ட செயலாளர் பொன்காந்தன் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணைகளது தொடர்ச்சியாகவே இன்றைய விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் தம்மீதான விசாரணைகள் இடம்பெற்ற போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் தனிப்பட்ட செயலாளர் பொன்காந்தன் ஆகியோரது நிலை தொடர்பாகவோ அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்களோ ஏதும் தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சியிலுள்ள (புலி)கூட்டமைப்பின் சிறீதரனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் தேடுதலொன்றின் போது ஆணுறைகள் ஆபாச குறுந்தகடுகள் மற்றும் பெண்களது புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள்

No comments:
Post a Comment