இலங்கை::இலங்கையில் மனிதாபிமான பணிகளுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச சஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.யுத்த முடிவின் பின்னர்; மனிதாபிமான தேவைகளை கண்டறிந்து அத் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது பிரதான நோக்கம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சங்கத்தின் 150 நிறைவை முன்னிட்டு அச்சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 90 நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 13,000 பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment