Tuesday, February 05, 2013
இலங்கை:::இலங்கை உள்நாட்டு விவகாரத்தில், ஐ.நா.,தலையிடுவதை அனுமதிக்க முடியாது,'' என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையின்,65வது சுதந்திர தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. திரிகோணமலையில் நடந்த விழாவில், அதிபர் மகிந்தா ராஜபக்ஷே பேசியதாவது:நம்நாட்டில்,இன, மத பேதம் இல்லை. அந்நியர் ஆட்சி காலத்தில் இன, மத பேதங்கள் மூலம் நாட்டை பிரித்து ஆட்சி செய்ய முயன்றனர். மத வேற்றுமை உருவாக்க யாராவது முயற்சி செய்தால், அவர்கள் தங்கள் மதத்துக்காக கடமையாற்றுகின்றனர், என சொல்ல முடியாது. புலிகள் போன்று, நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர் என்று தான் அர்த்தம்.ஐ.நா.,சபை சாசனத்தின், 2வது பிரிவில், "உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை' என, கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட, ஐ.நா.,வை அனுமதிக்க முடியாது.இலங்கையில், நல்லிணக்க குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், நேரில் வந்து நிலைமை பார்வையிடலாம்.வெளிநாட்டு விவகாரத்தில், இலங்கை, அணிசேர நாடுகளின் கொள்கையை தான் கடை பிடிக்க விரும்புகிறது.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

No comments:
Post a Comment