Friday, February 15, 2013

இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - சுவிட்சர்லாந்து!

Friday, February 15, 2013
ஜெனிவா::இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள தென்ஆபிரிக்கா முயற்சித்து வருவதாகவும், இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவின் இந்த முயற்சிக்கு நிதி மற்றும் அரசியல் ரீதியான உதவிகளை வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளது.

அனைத்து தரப்பினரது பங்களிப்புடன் விரிவாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என சுவிட்சர்லாந்து நம்பிக்கை வெளியிட்டுள்ளது.யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் தென் ஆபிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக அமையும் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கரோல் வொல்ட்டீ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment