Monday, February 18, 2013

ஒபாமாவின் புளோரிடா ஓய்வு விடுதியின் மீது அத்துமீறிய விமானத்தை 'எப்-16' போர் விமானம் விரட்டிச் சென்றது!

Monday, February 18, 2013

வாஷிங்டன்அமெரிக்க அதிபர் ஒபாமா புளோரிடாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓய்வு விடுதிக்கு அருகாமையில் உள்ள வான்வெளிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி 'செஸ்னா-152' விமானம் ஒன்று ஒபாமாவின் ஓய்வு விடுதி அருகே உள்ள வான்வழிப் பாதையில் அத்துமீறி நுழைந்தது பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், வட அமெரிக்க விமானப்படை தளத்திற்கு தகவல் அளித்தனர். அங்கிருந்து மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்த 'எப்-16' ரக போர் விமானம் அத்துமீறி பறந்த விமானத்தை விரட்டிச் சென்றது. போர் விமானத்திற்கு துணையாக கடற்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்களும் இணைந்துக் கொண்டன.

போர் விமானத்தால் விரட்டப்படுவதை கவனித்துவிட்ட அத்துமீறிய விமானத்தின் விமானி, ஸ்டுவார்ட்டில் உள்ள வித்தாம் ஃபீல்ட் விமான தளத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். அவரை சுற்றிவளைத்த ரகசிய போலீசார் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த 5 மணி நேரத்திற்கு பின்னர், இன்னொரு 'லேன்கேர்-320' ரக சிறிய விமானம் ஒன்று தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது. அந்த விமானத்தையும் போர் விமானம் விரட்டிச் சென்று சேருமிடம் வரை பின் தொடர்ந்து, பின்னர் திரும்பி வந்தது.

No comments:

Post a Comment