Thursday, February 21, 2013
ஐதராபாத்::ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 15 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு: ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் ஒரு பகுதியான தில்சுக் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் வணிகம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கோனார்க் திரையரங்க பகுதியில் இன்று மாலை 7.01 மணியளவில் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனைதொடர்ந்து இரண்டாவது குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை: தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தில்சுக் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை: குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் , காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு:ஐதராபாத் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையடுத்து சென்னைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகா, மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்.பி.,சிங் கூறுகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் தடயங்களை பாதுகாக்கும் விதமாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
ஐதபாராத் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
சென்னை::ஆந்திரா தலைநகர் ஐதராபாத் தில்சுக் நகரில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் பலியானதாக உள்துறை செயலாளர் தெரிவித்தார். ஏராளமானோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தினர். தடயங்களை சேகரித்து வருகின்றனர். அப்போது வெடிக்காத ஒரு குண்டை போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தையடுத்து ஐதராபாத் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஐதராபாத்திற்கு தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பையடுத்து அருகில் உள்ள நகரமான சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இதேபோல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, மேற்கு






No comments:
Post a Comment