Saturday, February 23, 2013
சென்னை::இலங்கையில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கி தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த போது அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் கடலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி த ஹிந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுத் திட்டம் ஒன்றை அமுலாக்க, தம்மிடம் உறுதியளித்திருப்பதாக, மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக அவர்கள் வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment