Sunday, January 6, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பிலான பிரச்சாரங்களை புலி ஆதரவு அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளன!

Sunday, January 06, 2013
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பிலான பிரச்சாரங்களை  புலி ஆதரவு அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மிட்சாம், மோர்டன், மெக்டொனாவ் உள்ளிட்ட சிலர் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்ளை ஆரம்பித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மஹாராணி எலிசபத் கலந்த கொள்ள மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக இளவசரர் சாள்ஸ் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் பிரித்தானியா பொதுநலய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது எனவும் தமிழ் புலி ஆதரவு  அமைப்புக்கள் அந்நட்டு வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளன

No comments:

Post a Comment