Monday, January 28, 2013

படையினரின் சேவைகள் குறித்து வடக்கு மக்கள் திருப்தியுடன் காணப்படுகின்றனர் - யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க!

Monday, January 28, 2013
இலங்கை::படையினரின் சேவைகள் குறித்து வடக்கு மக்கள் திருப்தியடைந்துள்ளதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் பின்னர் அரசாங்கமும் படையினரும் வடக்கில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யுத்த நிறைவைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையினரின் எண்ணிக்கை கிரமமாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் கனிசமானளவு நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.வடக்கின் சில பகுதிகளின் காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வாழந்து வருவதாகவும், அவ்வாறானவர்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment