Thursday, January 10, 2013

எல்லாருக்கும் பொங்கல் பரிசு ஏன்?கோத்தகிரியில் முதல்வர் விளக்கம்!

Thursday, January 10, 2013
கோத்தகிரி::தமிழக மக்கள் எல்லாமும் பெற்று, மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில், கூட்டுறவு பண்டக சாலையின் கோடநாடு கிளை ரேஷன் கடையில், பொங்கல் பரிசு திட்ட துவக்க விழா, நேற்று நடந்தது.மாநில முதல்வர் ஜெயலிலதா, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்து, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கி பேசியதாவது:"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதே அரசின் கொள்கை. பொங்கல் நாள் நெருங்குகிறது. மக்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். பருவமழை பொய்த்துவிட்டது. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்கள், கேள்விக்குறியாக உள்ளன.இருப்பினும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகுப்பு அளிக்க அறிவித்துள்ளோம்.பொங்கல் திருநாளை மாநில மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான், பொது வினியோக திட்டம் மூலம், பொங்கலை முன்னிட்டு, 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும், 100 ரூபாய் ரொக்கம் என, 160 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுடன், விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இப் பரிசு வழங்கப்படும். வரும், 13ம் தேதி ஞாயிற்று கிழமை விடுமுறை என்றாலும், அன்றைய தினம் ரேஷன் கடைகள் இயங்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment